பரட்டைத் தலை, பரந்த நெற்றி, அப்போதுதான்
படுத்து எழுந்தது போல் உயிரற்ற பார்வை,
குடைமிளகாய் மூக்கு, தேங்காய் பற்கள்
அவற்றை மூட சிரமிக்கும் பேருதடுகளோடு
இருவார மீசை தாடி,
கருப்பு நிறம், நெடு நெடுவென எக்கச்சக்க உயரம்
என்றவாரியான இவன் உருவத்தின் பேரிலக்காரத்தை
அவள் உணர்த்தியது போல் ஆணித்தனமாக உணர்த்தத் தவறியது
அவன் ஒற்றை அறை வீட்டுச் சுவற்றின் தனிக்கண்ணாடி!
No comments:
Post a Comment