Thursday, December 1, 2011

அருவி நீ


ஆடி பெருக்கில் ஆற்றல் அளவிரந்த காட்டாற்று பேரருவியாய் உன் அழகு...
தள்ளி நின்று ரசித்தவரை நானாய் இருந்தேன் நான்...
மெல்ல நெருங்க நெருங்க... இன்று,
கல் கரை பாறை பலகோடி மண் துகல்
மட்டை மரம் காடு கடல் என சிதறி கிடக்கிறேன்
ப்ரபஞ்சமெங்கும் வியாபித்த உன் பாதை எங்கிலும் நான்!!!

மழையணைத்த பூமி


மழை அணைத்து விட்டு சென்ற பூமி
அம்மா வந்து சென்ற என் வீடு போல்
பளிச்சென்றே இருக்கின்றது ஒவ்வொரு முறையும்!

அழுகை


கேட்டது கிடைக்காது அழுது புலம்புகையில்
மிரட்டும் அப்பாவும் தேற்றும் அம்மாவும்
நின்றே போனார்கள் சிறுவயது திருவிழா தெருவுடனே

விலகாதே!


மழை இரவினை பின் தொடர்ந்த அதிகாலைப் பனியாய்
அடி நீ வந்து சென்றாய் சுவடுகள் இல்லாது!
அடுத்த மழை வரை எவ்வாறு பொறுத்திருப்பேன்?
வானிலை அறிக்கைகளை நம்ப முடிவதில்லை ;(

Wednesday, September 7, 2011

பிரிவு

நம் சந்திப்பு முடிகையில் “பிறகு சந்திப்போம்” என்று சொல்லிப் பிரிகிறேன்,
உன் கன்னக் குழியிலும் நாடி வெட்டிலும் தொலைந்து போன என்னை...

Thursday, August 18, 2011

உன் பார்வை


என் மீது மோதிய உன் பார்வையால் சுக்கு நூறானது என் இதயம்...
உன் பிறை நெற்றியில் அது “விபத்து பகுதி” என்று சிறு பொட்டாவது வைத்திருக்க கூடாதா?

Tuesday, July 26, 2011

உன் கண்கள்


உன் கண்ணிமைக் காற்றில் அசைகிறது என் ஆறடி...
இமை மூட விழுகிறேன்...  நீ கண் திறக்க எழுகிறேன்...
துறவி சொன்ன “எழுமின் விழிமின்”, எனக்கானது
“எழுமின் விழுமின்”, உன் விழிமீனால்...