Wednesday, February 20, 2008

பிரிவு...

கத்தி
உணர்த்த முடியாத வலி, கூறிக் காட்ட முடியாத அன்பு என இவற்றை,
காய்ந்த சட்டி தொட்ட கை போல், சட்டென உணர்கின்றேன் நான்,
நம்
பிரிவால்...

உனை மறவேன் என்ற நம்பிக்கையிலும்,
என்றோ சந்திப்பேன் என்ற உயிர் ஆசையிலும்,
நம் நினைவுகளை மட்டும் அள்ளிச் செல்கின்றேன்,
பெட்டி பெட்டியாய்...
நான்கு வருட படிப்பும், உடனிருப்பும் முடிந்து ஊருக்கு புறப்படுகையில் தோன்றியவலி தான் இந்த வரிகள்...

No comments: