Wednesday, February 20, 2008

college times... :)

துன்னூறு பூசிகிட்டுத் துரு துருன்னு பார்த்து வந்தேன்,
மரத்தடி மேடையில, நடபாத ஓரத்துல,
சேர்ந்து சிரிச்சுகிட்டு, பையன் பொண்ணா நிக்கிராக,
பட்டணம் பட்டணந்தேன், பாத்துக்கிருவோம் நம்மளும்னு,
சீயாரீ (GRE) வார்த்தையெல்லாம் மனப்பாடம் பண்ணிக்கிட்டு,
பெர்சனாலிட்டி சரி இல்லன்னு சொக்கா பான்ட்டு மாத்திக்கிட்டு,
பக்கத்துல பொய் நின்னு பல் தெரிய "hi" சொன்னா, "Slam" புக்க (book) எழுதிட்டியா?
ஊர் போரேன் நாளைக்குன்னா(ள்) ...


This is how the four years of my college life passed... lol.. really!!!

பிரிவு...

கத்தி
உணர்த்த முடியாத வலி, கூறிக் காட்ட முடியாத அன்பு என இவற்றை,
காய்ந்த சட்டி தொட்ட கை போல், சட்டென உணர்கின்றேன் நான்,
நம்
பிரிவால்...

உனை மறவேன் என்ற நம்பிக்கையிலும்,
என்றோ சந்திப்பேன் என்ற உயிர் ஆசையிலும்,
நம் நினைவுகளை மட்டும் அள்ளிச் செல்கின்றேன்,
பெட்டி பெட்டியாய்...
நான்கு வருட படிப்பும், உடனிருப்பும் முடிந்து ஊருக்கு புறப்படுகையில் தோன்றியவலி தான் இந்த வரிகள்...